Categories
உலக செய்திகள்

கர்ப்பிணியாக நிகழ்ச்சியில் தோன்றிய மேகன்.. வெளியான வீடியோ..!!

பிரிட்டன் இளவரசி மேகன், ஓபராவுடனான பேட்டிக்கு பின்பு முதன் முதலாக ஒரு  தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வெளியிட்ட வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

பிரிட்டன் இளவரசர் ஹரியின் மனைவி மேகன் கர்ப்பமடைந்திருப்பதால் பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை தவிர்த்து வருகிறார். இதனால் கடந்த மாதம் இளவரசர் பிலிப் காலமான போதும் அவரது இறுதிச் சடங்கில் மேகன் பங்கேற்கவில்லை. இளவரசர் ஹரி மட்டுமே பங்கேற்றார்.

இந்நிலையில் வரும் ஜூலை மாதம் 1 ஆம் தேதியன்று கென்சிங்டன் மாளிகையில் இளவரசி டயானாவின் 60வது பிறந்த நாளிற்காக உருவச்சிலை திறப்பு விழா நடைபெறவுள்ளது. அதில் மேகன் கலந்து கொள்வாரா? என்று தெரியவில்லை. இந்நிலையில் கடந்த மே 2ஆம் தேதியன்று உலகம் முழுவதும் தடுப்பூசி திட்டத்தை ஊக்குவிப்பதற்காக அமெரிக்காவில் Vax Live என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

இதற்காக மேகன் சிறிய வீடியோ காட்சி ஒன்றை மட்டும் வெளியிட்டிருந்தார்.  தொலைக்காட்சியில் நேற்று இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டுள்ளது. அதில் கர்ப்பிணியாக மேகன் தோன்றிய வீடியோ காட்சிகளும் புகைப்படங்களும் இணைய தளங்களில் வெளியாகி வருகின்றன. ஓபரா வின்ஃப்ரே உடனான நேர்காணலிற்கு பின்பு தற்போதுதான் முதன் முதலாக தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மேகன் தோன்றியிருக்கிறார்.

Categories

Tech |