பிரிட்டனில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான பொருட்களை விரைவில் வாங்கிக் கொள்ளுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
பிரிட்டன் துறைமுகங்களில் நெருக்கடி ஏற்பட்டிருப்பதால், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு தேவைப்படும் எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் பொம்மைகளை நாட்டிற்குள் எடுத்து சிக்கல் உண்டாகும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அதாவது, கனரக வாகனங்களுக்கான ஓட்டுநர்கள் பற்றாக்குறையால், துறைமுகங்களிலிருந்து நாட்டிற்குள் பொருட்களை எடுத்து வருவதில் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது.
எனவே, வியாபாரிகள் இந்த பிரச்சனையால், பண்டிகை நாட்கள் மற்றும் பொருளாதாரத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார்கள். இதனிடையே, கண்டெய்னர்களை, சிறிய கப்பல்களில் ஏற்றி, சிறிய துறைமுகங்களின் வழியே எடுத்து வர தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. எனவே தான், விரைவில் தேவையான பொருட்களை வாங்கிக்கொள்ளுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.