Categories
சென்னை மாவட்ட செய்திகள்

என்னை ஜாமீனில் எடுத்துருங்க… வக்கீலுக்கு 1/2KG தங்கம் அட்வான்ஸ்…. அதிர வைத்த கொள்ளையன் ….!!

ஜாமீனில் எடுக்க அரை கிலோ தங்கத்தை கொள்ளையன் அட்வான்ஸாக வக்கீலுக்கு கொடுத்த சம்பவம் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சென்னையில் அமைந்துள்ள தியாகராய நகர் மூசா தெருவில் உத்தம் ஜுவல்லர்ஸ் என்ற மொத்த நகை விற்பனை கடை உள்ளது. இந்தக் கடை ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமானதாகும். இங்கு கடந்த 21ஆம் தேதி அதிகாலை கைவரிசை காட்டிய கொள்ளையர்கள் 2.5 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி நகைகளை அள்ளிச் சென்றனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின்பேரில் தியாகராயநகர் ஆணையர், மாம்பலம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வந்தனர்.

கொள்ளைச் சம்பவம் அரங்கேறிய இடத்தில் இருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்த போலீசாருக்கு கொள்ளை சம்பவத்தில் தொடர்புடையவர் கண்டறியப்பட்டனர். கோடம்பாக்கத்தை சேர்ந்த மார்க்க சுரேஷ் என்பவரும், அவரின் கூட்டாளிகள் தான் இந்த கொள்ளையை அரங்கேற்றி உள்ளனர் என போலீசார் அறிந்ததை தொடர்ந்து அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இதில் மார்க்கெட் சுரேஷ், அவரது தோழி கங்காதேவி ஆகியோர் திருவள்ளூரில் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் கைது செய்யப்பட்ட மார்க்கெட்டு சுரேஷிடம் போலீசார் விசாரணை செய்தபோது,  கொள்ளையடிக்கப்பட்ட நாகையிலிருந்து அரை கிலோ தங்கத்தை வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவரிடம் கொடுத்து வைத்துள்ளதாக தெரிவித்தார்.  இதையடுத்து போலீசார் வழக்கறிஞரிடம் விசாரணையை தொடர்ந்தபோது, போலீசாரால் கைது செய்யப்பட்டால் பிணையில் எடுக்க முன்பணமாக இந்த தங்கத்தை வைத்துக் கொள்ளுங்கள் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரிடம் இருந்த தங்கத்தை பெற்று ஒப்புதல் வாக்குமூலமும் பெற்றுக் கொண்டனர். இந்த வழக்கில் ஒரு கிலோ 150 கிராம் தங்க நகைகள், 7 கிலோ வெள்ளி நகைகளும் போலீசாரால் மீட்கப்பட்டுள்ளன. மீதி நகைகளையும், மீட்பதற்கு போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

Categories

Tech |