Categories
உலக செய்திகள்

சீனா-ரஷ்யா இடையே புதிய பாலம் திறப்பு…. இரு தரப்பு வர்த்தக உறவை மேம்படுத்த முயற்சி…!!!

சீனா-ரஷ்யா நாடுகளுக்கிடையே வர்த்தக உறவை மேம்படுத்த ஒரு பாலம் திறக்கப்பட்டிருக்கிறது.

சீனா மற்றும் ரஷ்யா நாடுகளுக்கிடையே இருக்கும் வர்த்தக உறவை மேம்படுத்துவதற்காக இரண்டு நாடுகளுக்கும் இடையே ஒரு பாலம் திறக்கப்பட்டிருக்கிறது. இந்த இரு நாடுகளுக்கும் இடையே கடந்த 2014ம் வருடத்தில் ஆமூர் என்னும் நதிக்கு நடுவில் பாலம் கட்டப்படுவதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டது.

அதன்படி, ரஷ்ய நாட்டின் பிலகோவேஷிசேன்ஸ்க் என்னும் நகரத்தையும் சீன நாட்டின் ஹெய்ஹீ என்னும் நகரத்தையும் சேர்க்கக் கூடிய வகையில் 2.2 கிலோ மீட்டர் நீளத்தில் ஒரு பாலம் திறக்கப்பட்டிருக்கிறது. இந்த பாலத்திற்கான கட்டமைப்பு பணிகள் விரைவாக நடந்து வந்தது. எனினும், கொரோனாவால் பாலம் திறப்பதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது இந்த பாலம் திறக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |