Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு காலம் முடிவடையும் வரை மதுக்கடைகள் மூடல்!- கேரளா அதிரடி.!!

கேரளாவில் இதுவரை 502 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில், 30 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 3 பேருக்கு  மட்டும் கேரளாவில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் மே 17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. சூழ்நிலைக்கு ஏற்ப கட்டுப்பாடுகளுடன் மதுக்கடைகளை திறக்கலாம் என மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி பல்வேறு மாநிலங்கள் மதுக்கடைகளை திறந்துள்ளன. இதனால் சமூக இடைவெளி காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் கேரள அரசு  எடுக்கும் ஒவ்வொரு முன்எச்சரிக்கை நடவடிக்கையும் மற்ற மாநிலங்களுக்கு மட்டும் இன்றி உலக நாடுகளுக்கும் முன்னோடியாக விளங்குகிறது. அதுபோலவே  தற்போதும்; கேரளாவில் ஊரடங்கு காலம் முடிவடையும் மே 17ம் தேதி வரை மதுக்கடைகளை திறக்க அனுமதி வழங்கக்கூடாது என  முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் போலீசாருக்கு முக்கிய பணிகள் இருப்பதால் மதுக்கடை பாதுகாப்பில் ஈடுபடுத்த முடியாது என்றும் அரசு கூறி உள்ளது.

Categories

Tech |