சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சுதந்திர கொடியை வீட்டுக்கு வீடு ஏற்ற சொல்லுறீங்க. கொடி ஏற்ற வீடு வேணும்ல. இப்ப நாங்க என்ன பண்ண போறோம்… எங்களுக்கு வீடு இல்ல சாமி. நாங்க தேசிய கொடியை வீதியில ஏத்துறோம். தேசிய கொடி மேல இருக்கின்ற பற்று , தேச குடி மேல உங்களுக்கு இல்லையே. எங்க போய் கொடியேத்துறது ?
கொடியேத்த சொல்றீங்க நீங்க சுதந்திர இந்தியான்னு…. தாழ்த்தப்பட்ட பிள்ளைகளை 300 பேர் என தீண்டாமை ஒழிப்புன்னு சர்வே வெளியிடுது. ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு 20 விழுக்காட்டு பெண்களுக்கு அலுவலகத்தில் இருக்க நாற்காலி இல்ல. பேரே எழுதக் கூடாது… ஏனா அவன் தாழ்த்தப்பட்டவன். எப்படி இருக்கு ?
இந்த 300 பேர் யாருமே இந்த தேசிய கொடியை ஏத்த கூடாது. இந்திய குடியரசுதந்திரக் கொடி ஏத்த முடியாது. ஏனா அவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள். அப்ப அடித்தட்டு மக்களுக்கு சுதந்திரம் வந்து அடையவே இல்லையே ? அப்படினா எப்படி தேசப்பற்று வரும். இதுல என்ன கொடுமை அப்படின்னா.
ஊராட்சி மன்ற தலைவர் இருக்கும் அதே அலுவகத்தில் துணைத் தலைவர் வேலை செய்ய மாட்டாரு. ஏன்னா அவன் தாழ்ந்தவன், இவர் உயர்ந்த ஜாதி. வேற அலுவலகம் கேக்குறா. இவன் இருக்கிற அந்த அலுவலகத்தில் இருக்க விரும்பாத நீ, அவன் வாழ்கிற பூமியில ஏன் வாழுற? செத்துப் போ.செத்துப் போ.
நான் தாழ்த்தப்பட்டவன், நான் சுவாசிச்சு விடுற காத்த நீ ஏன் சுவாசிக்கிற? மூச்ச புடிச்சுட்டு, மூக்க புடிச்சிட்டு செத்துப் போ. நீ ஏன் வாழற ? இவ்வளவு தீண்டாமை கொடுமையை வச்சிட்டு, சமத்துவம் பேசுறது, சகோதரத்துவம் பேசுவது, வேற்றுமையில் ஒற்றுமை பேசுவது, தேசப்பற்று பேசுவது, இந்த தேசத்துக்கு ஒரே பற்று தான், அது பணப்பற்று தான் என தெரிவித்தார்.