Categories
தேசிய செய்திகள்

கொரோனா வைரஸ் கண்டறிய ஒரு வழி…. வைரலாகும் தகவல் உண்மையல்ல…. எச்சரித்த உலக சுகாதார அமைப்பு….!!

கொரோனா வைரஸ் உள்ளதா என கண்டறிவதற்கு ஒரு வழி வைரலாகும் தகவல் உண்மையல்ல என கூறிய உலக சுகாதார அமைப்பு.

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவிக் கொண்டிருக்கும் நிலையில் மக்கள் ஆக்சிஜனும் படுகைகள் வசதிகள் இல்லாமலும் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். மேலும் ஒவ்வொருவருக்கும் தொற்று ஏற்பட்டு உள்ளதா என கண்டறிய இதை செய்து பாருங்கள் போதும் எனக்கூறும் பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்த பதிவில் கூறியதாவது “பயனர்கள் 20 நொடிக்கு மேல் தங்களின் மூச்சை இழுத்துப் பிடித்துக் கொள்ள வேண்டும்.

நீண்ட நேரம் மூச்சை இழுத்துப் பிடிக்க முடிந்தால் அந்த நபருக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை” என அதில் குறிப்பிட்டிருந்தது. இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இது உண்மையில்லை என்பது தெரியவந்துள்ளது. ஒருவர் 10 நொடிகளில் அல்லது அதற்கு மேல் எந்த வித சிரமமும் இன்றி மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டால் அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என்று கூற முடியாது என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த ஆண்டு முதல் அலை ஏற்பட்டபோது இதுபோன்ற தகவல்கள் பல சமூக வலைதளங்களில் பரவியது. தற்போதும் இது போன்ற தகவல்கள் பரவி வருகின்றன. இது முற்றிலும் உண்மை அல்ல. இதுபோன்ற போலி செய்திகளை பரப்ப வேண்டாம். அவ்வாறு பரப்புவதில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. மேலும் சில சமயங்களில் இதனால் உயிரிழப்புகள் கூட ஏற்பட வாய்ப்புள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

Categories

Tech |