நடிகர் சங்கத் தேர்தல் சட்டப்படி நடத்தப்படாததால் செல்லாது என அறிவிக்க வேண்டுமென்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதிட்டதுள்ளது.
நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பான வழக்கு மற்றும் உறுப்பினர் நீக்கத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று நீதிபதி கல்யாணசுந்தரம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது விஷால் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கடந்த ஜூன் 23-ம் தேதி நடந்த நடிகர் சங்க தேர்தலில் 70% பேர் வாக்களித்திருக்கிறார்கள். பதவி காலம் முடிந்துள்ளதால் நடிகர் சங்க பணிகள் தேங்கி கிடக்கின்றது. உடனே வாக்கு எண்ணிக்கை முடிவை அறிவித்திருந்தால் புதிய நிர்வாகிகள் தேர்வாகி இருப்பார்கள். அரசின் தலையீடு இல்லையென்றால் இந்த பிரச்சனை வந்து இருக்காது. எனவே நடிகர் சங்க வாக்கை என்னைக் கூடாது என்ற உத்தரவு மாற்றியமைத்து வாக்கை எண்ணுவதற்கு அனுமதிக்க வேண்டும் என வாதிடப்பட்டது.
அப்போது தமிழக அரசு தரப்பில் குறுக்கிட்ட அரசு தலைமை வழக்கறிஞ்சர் இந்த விவகாரத்தில் அரசு தலையிடவில்லை , உறுப்பினர்கள்தான் நீக்கம் உள்ளட்ட பல பிரச்சனைகள் பதிவாளரிடம் வரை சென்றுள்ளது எனவே இதில் அரசு நேரடியாக தலையிடவில்லை. நடிகர் சங்க பதவியை நீட்டிக்க முடியாது . இது முரணானது. ஆறு மாதங்கள் பதவியில் நீடிக்கலாம் என்ற புதிய விதியை இவர்களே உருவாக்கி தேர்தல் நடத்தப்பட்டதால் இந்த தேர்தல் செல்லாது என அறிவிக்க வேண்டும் என என்று வாதிட்டார். இதையடுத்து வழக்கு விசாரணையை வரும் வெள்ளிக் கிழமைக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.