தமிழகத்தில் 35ஆவது அமைச்சராக இன்று உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றார். அவருக்கு ஆளுநர் ஆர்.என் ரவி தற்போது பதவி பிரமாணம் செய்து வைத்த நிலையில், அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சரான பின்பு செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி, விமர்சனங்களுக்கு செயல் மூலம் பதில் கொடுப்பேன்.
தற்போது நடித்துவரும் மாமன்னன் படம் தான் நான் நடிக்கும் கடைசி படம். விளையாட்டுகளின் தலைநகரமாக தமிழகத்தை மாற்ற முயற்சி செய்வேன். தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட ஒவ்வொரு தொகுதிக்கும் மினி ஸ்டேடியம் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன். இனி திரைப்படங்களில் நடிக்கப் போவதில்லை என அமைச்சர் உதயநிதி அறிவித்துள்ளார்.