Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள் பல்சுவை மாநில செய்திகள்

#BREAKING: வாட்ஸ்அப் செயல்பட தொடங்கியது: 2 மணி நேரம் கழித்து நிம்மதி பெருமூச்சு விட்ட பயனர்கள் ..!!

வாட்ஸ்அப் தளம் முழுமையாக தற்போது பயன்பாட்டில் இல்லாமல் போய்விட்டது. முடங்கியுள்ள வாட்ஸ்அப்பை சரி செய்யும் முயற்சியில் மெட்டா நிறுவனம் ஈடுபட்டு கொண்டு  இருந்தது உலகம் முழுவதும் வாட்ஸ் அப் பயனர்களால் தகவல்களை அனுப்ப முடியாமலும், பெற முடியாமலும் அவதிப்பட்டு வந்தனர். எங்கெல்லாம் வாட்ஸ் அப் முடங்கியுள்ளதோ,  அவர்கள் டுவிட்டர் போன்ற பிற தளங்கள் மூலமாக புகார்கள் அளித்து வந்தார்கள்.

வாட்ஸ்அப் பயன்படுத்த முடியவில்லையே,  உங்கள் ஊரில் நீங்கள் பயன்படுத்த முடிகிறதா ? போன்ற கேள்விகளை எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். எதனால் இந்த பிரச்சனை ஏற்படுகிறது என்பதை கண்டறிந்து அதனை சரிசெய்யும் முயற்சியில் மெட்டா நிறுவனம் ஈடுபட்டுக் கொண்டு இருந்த நிலையில் 2 மணி நேரம் முடங்கி இருந்த வாட்ஸ் அப் தற்போது மீண்டும் செயல்பட தொடங்கியது.

Categories

Tech |