வாட்ஸ்அப் தளம் முழுமையாக தற்போது பயன்பாட்டில் இல்லாமல் போய்விட்டது. முடங்கியுள்ள வாட்ஸ்அப்பை சரி செய்யும் முயற்சியில் மெட்டா நிறுவனம் ஈடுபட்டிருக்கிறது. உலகம் முழுவதும் வாட்ஸ் அப் பயனர்களால் தகவல்களை அனுப்ப முடியாமலும், பெற முடியாமலும் அவதிகப்படுகின்றார்கள். எங்கெல்லாம் வாட்ஸ் அப் முடங்கியுள்ளதோ, அவர்கள் டுவிட்டர் போன்ற பிற தளங்கள் மூலமாக புகார்கள் அளித்து வருகிறார்கள்.
வாட்ஸ்அப் பயன்படுத்த முடியவில்லையே, உங்கள் ஊரில் நீங்கள் பயன்படுத்த முடிகிறதா ? போன்ற கேள்விகளை எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். எதனால் இந்த பிரச்சனை ஏற்படுகிறது என்பதை கண்டறிந்து அதனை சரிசெய்யும் முயற்சியில் மெட்டா நிறுவனம் தற்போது ஈடுபட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஆனால் எந்த அளவுக்கு உலகம் முழுவதும் பாதிப்பு இருக்கிறது என்பதை கண்டறியும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டு கொண்டு இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கிறார்கள்.
இந்தியாவை பொருத்தவரை தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வாட்ஸ்அப் சேவைகள் முழுவதுமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே இது குறித்து விரைவிலேயே மெட்டா நிறுவனம் அறிவிப்பு வெளியிடும் என நாம் எதிர்பார்க்கலாம். அதுவரையில் இணையதளத்திலேயே பல்வேறு சேவைகள் மூலமாக தகவல் தொடர்புகள் பரிமாறப்பட்டு வருகின்றன.