Categories
மாநில செய்திகள்

#BREAKING: ஆர்டர்லி முறையை ஒழிக்க எடுத்து நடவடிக்கை என்ன ? தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி…!!

ஆர்டர்லி முறையை ஒழிப்பது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய டிஜேபிக்கு உயர்நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது. 

மேலும் ஒரு வார்த்தை போதும் ஆனால் அரசிடம் இருந்தோ டிஜிபிடமிருந்தோ அது வருவதில்லை என்று நீதிபதி அதிர்ச்சி தெரிவித்து இருக்கிறார் நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியன். காவலர்களுக்கு காவலர் குடியிருப்பு ஒதுக்கப்பட்டுள்ளது. காவலர் பணியிடமாற்றம் செய்யப்பட்ட பிறகும் அந்த இடத்தை ஒப்படைக்கவில்லை என்று வழக்கு தொடரப்பட்டது. காவல்துறை உத்தரவை எதிர்த்து, சம்மந்தப்பட்ட காவலர் தொடர்ந்து வழக்கில்,  இடத்தை காலி செய்யும் படி உத்தரவிட்டிருந்தார்.

அதே வழக்கில் தமிழகத்தில் ஆர்டர்லி நடைமுறை இன்னும் தொடர்ந்து வருகின்றது. 1975 ஆம் ஆண்டு ஒழிக்கப்பட்ட பிறகும் தற்போது வரை தொடர்வதாகும், அந்த ஆர்டர்லி முறையை முழுமையாக ஒலிக்க வேண்டும் என்றும்,  அதேபோல உயர் அதிகாரிகளின் கார்களில் கருப்பு ஸ்டிக்கர் பயன்படுத்துவதை தடுக்க வேண்டும்,  சொந்த வாகனங்களில் அரசு முத்திரையையும்,  காவல்துறை என்ற முத்திரையை பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என்பது  தொடர்பான வழக்கை நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியன் தொடர்ந்து விசாரித்து வருகிறார்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரிக்க வந்த போது,  தமிழக காவல்துறை தரப்பில் இதுவரை 19 ஆர்டர்லிக்கள் திரும்ப பெற்றிருப்பதாகவும், சமீபத்தில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர் கூட்டத்தில் ஆர்டர்லிகளை  பயன்படுத்தக்கூடாது என்று கடுமையான எச்சரிக்கையை முதல்வர் விடுதிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.தற்பொழுது சூழலில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது, புகாரில் நடவடிக்கை எடுப்பது என காவல்துறைக்கு ஒரு நாளைக்குள் 24 மணி நேரம் போதவில்லை என்றும் தெரிவித்தார்.

24 மணி நேரம் ரோந்து பணியிலும்,  இரவு நேரம் உட்பட  ஈடுபடுவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையின் செயல்பாடுகளுக்கு பாராட்டு தெரிவித்து,  பணிகளுக்கு பாராட்டு தெரிவித்த நீதிபதி,  சுதந்திரம் அடைந்து 75 ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடப்படும் நிலையில்,  தற்போதும் ஆங்கிலேய ஆட்சியில் காலத்திலிருந்த ஆர்டர்லி முறையை பின்பற்றுவது வெட்கக்கேடாக இருக்கிறது என தெரிவித்தார்.

குறிப்பாக உள்துறை தலைமைச் செயலாளர் ஆர்டர்லி முறை  ஒழிக்கப்பட வேண்டும் என்ற உத்தரவை மாவட்ட எஸ்பிக்களுக்கு முறையாக அமல்படுத்த வேண்டும் என்றும்,  கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார். இவ்வாறு செயல்படுத்தாத எஸ்பிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி மத்திய உள்துறை  அமைச்சகத்திற்கும் உத்தரவிடப்படும் என்றும் ஒரு எச்சரிக்கையை நீதிபதிகள் விடுத்திருக்கின்றார்கள்.

குறிப்பாக உள்துறை செயலாளர் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் எந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது தொடர்பாக விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்பதற்காக இந்த வழக்கில் தமிழக டிஜிபியை எதிர் மனுதாரர்களாக சேர்ந்த நீதிபதி,  ஒரு வாரத்தில் அவர்  அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதாவது உள்துறை தலைமைச் செயலாளர் வெளியிட்ட அறிவிப்பின் அடிப்படையில்,  எந்த மாதிரி நடவடிக்கை எடுக்கப்பட்டது ? தற்பொழுது ஆர்டர்லியில் எத்தனை பேர் இருக்கிறார்கள் ? எத்தனை பேர் திரும்ப பெறப்பட்டிருக்கிறார்கள் ? என்ற விவரங்களை முழுமையாக தாக்கல் செய்ய வேண்டும் என வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 18 ஆம் தேதிக்கு தள்ளி வைத்திருக்கிறார்.

Categories

Tech |