முன்னாள் மத்திய அமைச்சர் GK.வாசன் பிரதமர் மோடியை சந்தித்து பேசி வருகின்றார்.
முன்னாள் மத்திய அமைச்சரும் , தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும் ஜி கே வாசன் தற்போது டெல்லியில் இருக்க கூடிய பிரதமர் மோடி இல்லத்தில் பிரதமரை சந்தித்து பேசிக் கொண்டிருக்கிறார். தற்போது தான் இந்த சந்திப்பானது தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையடுத்து பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவரும் , மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷாவையும் சந்திப்பதற்கு ஜி கே வாசன் தரப்பில் நேரம் கேட்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியினர் தொடர்ச்சியாக ஜிகே வாசனை விமர்சித்து வருகின்றனர்.அவர் ஒரு காங்கிரஸ் கட்சியின் பாரம்பரிய குடும்பத்தில் இருந்து தற்போது பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு கொண்டிருக்கிறார். தேவைப்பட்டால் அவர் கட்சியை பாரதிய ஜனதா கட்சியில் கூட இணைப்பதற்கு வாய்ப்பு உள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் விமர்சனம் செய்த நிலையில் இந்த சந்திப்பு தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
ஏற்கனவே பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்த பொது GK. வாசனை டெல்லி வரும்படி அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பின் பேரில் தான் தற்போது இந்த சந்திப்பு நடைபெறுகிறது. இந்த சந்திப்பின் முழுமையாக நோக்கம் குறித்து இன்னும் சற்று நேரத்தில் GK. வாசன் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளிக்க உள்ளார்.