பீகார் மாநில சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ்குமார் அரசு வெற்றி பெற்றிருக்கிறது. எதிர்பார்த்தபடி முதலமைச்சர் நிதிஷ்குமார் தனது பெரும்பான்மையை எளிதாக நிரூபித்திருக்கிறார். ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ராஷ்டிர ஜனதா தளம் கூட்டணிக்கு காங்கிரஸ் கட்சி மற்றும் இடதுசாரி கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவளிக்கின்றன என்கின்ற காரணத்தால் பெரும்பான்மை குறித்து எந்தவிதமான சந்தேகமும் இல்லை.
அந்த பெரும்பான்மை தற்பொழுது சட்டசபையில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே முதல்வர் நிதிஷ்குமார், துணை முதல்வர் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த தேஜஸ்வி யாதவுடன் புதிய தொடக்கத்தை இன்று முதல் ஆரம்பிக்கிறார். இந்த புதிய அரசு ஏற்கனவே இருந்த பாரதிய ஜனதா கட்சி கூட்டணி அரசிலிருந்து மாறுபட்டு இருக்கும் என்ற கருத்தை அவர் தெரிவித்து இருக்கிறார்.
அதற்கு ஏற்றார் போலவே ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிக்கு பல முக்கிய பொறுப்புகள் அளிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்திலே பல புதிய அமைச்சர்கள் மீதான வழக்குகள் காரணமாக சர்ச்சைகளும் தொடர்ந்து வருகின்றன. இத்தகைய நிலையில்தான் இன்று சபாநாயகர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து நிதிஷ்குமார் அரசு தனது பெரும்பான்மையை நிரூபித்தது. இனிவரும் சில நாட்களிலேயே பீகாரில் பல்வேறு மாற்றங்களை நிதிஷ்குமார் கொண்டு வருவார் என அவரது கூட்டணியை சேர்ந்தவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
பீகாரின் வளர்ச்சிக்காக நாங்கள் (ஆர்ஜேடி மற்றும் ஜேடியு) இணைந்து செயல்பட உறுதிமொழி எடுத்துள்ளோம். நாடு முழுவதும் உள்ள தலைவர்கள் என்னை அழைத்து இந்த முடிவுக்கு வாழ்த்து தெரிவித்தனர், 2024 தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன்: பீகார் முதல்வர் நிதிஷ் குமார் சட்டப்பேரவையில்