டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேடு செய்தது தொடர்பாக 3 பேரை CBCID போலிஸார் கைது செய்துள்ளனர்.
குரூப்-4 தேர்வில் முறைகேடு தொடர்பாக 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. SP தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தனித்தனியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இன்று காலை எழும்பூரில் இருக்கக்கூடிய சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் சிபிசிஐடி போலீசார் 12 பேரிடம் இன்று காலையிலிருந்து விசாரணை மேற்கொண்டனர்.
12 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு இருக்கக் கூடிய சூழ்நிலையில் 3 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஆனால் கைது செய்யப்பட்டவர்களின் அவர்களுடைய விவரங்களை இதுவரை சிபிசிஐடி அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. இன்னும் சிறிது நேரத்தில் அது தொடர்பான அதிகாரப்பூர்வமான செய்தியாளர் சந்திப்பு இருப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது . கைதானவர்களிடையே கைதான மூன்று பேரில் ஒருவர் இடைத்தரகர் என்பது குறிப்பிடத்தக்கது.