பல்வேறு பகுதிகளில் இரவில் கொட்டிய கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அங்கங்கே மழை பெய்து வருகின்றது. தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கி இருப்பதையும் நாம் பார்த்து வருகின்றோம். கொட்டி வரும் கனமழையால் பல்வேறு மாவட்டங்களின் பள்ளி , கல்லூரிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக விடுமுறை விடப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டித்தீர்த்து வருகின்றது.சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மிதமான மழை பொன்னேரி, செங்குன்றம், கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர், மாதவரம், அண்ணாநகர், கோயம்பேடு, புழல், பூண்டி, ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி ஆகிய இடங்களில் மழை பெய்தது.
பல்வேறு மாவட்டங்களில் தொடரும் கனமழையால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு வருகின்றது. ஏற்கனவே நீலகிரி , ராமநாதபுரம் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்ட நிலையில் தற்போது கனமழையால் சேலம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என்று அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.