இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதித்த மஹாராஷ்டிராவில் மேலும் ஒருவர் பலியாகியுள்ளார்.
கடந்த டிசம்பர் மாதத்தில் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ்ஸின் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும், இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.
இந்தியாவிலும் கொரோனா வைரஸ்ஸின் தாக்கம் வேகமாக பரவி வருகின்றது. 987 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 86 பேர் குணமடைந்துள்ளனர். 879 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை 25ஆக அதிகரித்திருந்தது. இதனை மத்திய சுகாதாரத்துறை உறுதி படுத்தியுள்ளது. அதிகப்பட்சமாக மஹாராஷ்டிராவில் 193 பேர் பாதிக்கப்பட்டு 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் மும்பையில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த 40 வயது பெண்மணி உயிரிழந்துள்ளர். இவருக்கு உயர் இரத்த அழுத்தமும் இருந்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனாவினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பெற்று வந்தவர்களில் 25 பேர் குணமடைந்து குறிப்பிடத்தக்கது.
A 40-year old #Coronavirus patient has passed away in Mumbai, she was admitted yesterday following severe respiratory complications and was also a hypertension patient. This is the seventh corona virus-related death in Maharashtra
— ANI (@ANI) March 29, 2020