Categories
தஞ்சாவூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#Breaking: தஞ்சை ரவுடி கட்டை ராஜாவுக்கு தூக்கு ரத்து – நீதிமன்றம் புது உத்தரவு

ரவுடி கட்டை ராஜாவுக்கு தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொலை வழக்கில் பிரபல ரவுடி கட்டை ராஜாவுக்கு விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை உறுதி செய்ய கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இதில் தஞ்சையைச் சேர்ந்த பிரபல ரவுடி கட்டை ராஜா கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் 16 கொலை வழக்குகள் மற்றும் கொள்ளை, வழிப்பறி வழக்குகள் போன்றவை உள்ளன.

கும்பகோணத்தில் உள்ள சென்னியமங்கலத்தில் செந்தில்நாதன் என்பவரை 2013இல் கொலை செய்வது வழக்கில் கட்டை ராஜா கைது செய்யப்பட்டார். அவருக்கு தூக்க தண்டனையும், கூட்டாளிகளான ஆறுமுகம், செல்வம் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கி,  கும்பகோணம் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்பில் கட்டை ராஜாவுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையில் உறுதி செய்வதற்காக கீழமை நீதிமன்றம் சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளை மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆறுமுகம், செல்வம் ஆகியோர் ஆயுள் தண்டனையை ரத்து செய்யக்கோரி மேல்முறையீடு மனுவினை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதி பி.எம் பிரகாஷ் மற்றும் விஜயகுமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அதில் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளனர். இந்த தீர்ப்பில் நீதிபதிகள் கட்டை ராஜாவுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை, ஆயுள் தண்டனாக குறைத்தும்,  தண்டனையை சீராய்வு இன்றி அனுபவிக்க உத்தரவிட்டனர். மேலும் அவரது கூட்டாளிகளான ஆறுமுகம், செல்வம் ஆகியோருக்கு விக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்தும் உத்தரவிட்டனர்

Categories

Tech |