பொங்கல் பண்டிகையை கொண்டாட குடும்பத்திற்க்கு தலா ரூ 1000 வழங்கப்படுமென்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே ரூ. 70 கோடி மதிப்பில் நகராட்சிக்கு சொந்தமான 4.97 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்டுள்ள அரசு சட்டக்கல்லூரி, எம்ஜிஆர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த கட்டடங்களின் திறப்பு விழா, விழுப்புரம் நகராட்சி தொடங்கப்பட்டதற்கான நூற்றாண்டு விழா; புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தைத் தொடக்கி வைக்கும் விழா ஆகிய முப்பெரும் விழாக்கள் இன்று நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு புதிய மாவட்டத்தை தொடங்கி வைத்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் தலைநகராக கள்ளக்குறிச்சி நகராட்சி செயல்படும் என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் , அரிசி அட்டை வைத்திருக்கும் குடும்பத்தாரர்களுக்கு பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாட ரூ 1000 வழங்கப்படும். ஒரு கிலோ பச்சரிசி , சர்க்கரை , கரும்பு , முந்திரி , திராச்சை உள்ளிட்ட பரிசு தொகுப்பு வழங்கப்படும்.