Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: ஆளுநர் ஆர்.என் ரவியுடன் சபாநாயகர் அப்பாவு திடீர் சந்திப்பு ..!!

அடுத்த ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஜனவரி 9ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்ட, சூழலில் சட்டப்பேரவை தலைவர் அப்பாவு சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவுனில் ஆளுநரை சந்தித்து முறையாக அழைப்பு விடுக்க சென்றுள்ளார்.

ஜனவரி 9ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற இருக்கின்றது. பேரவை கூட்டம் எத்தனை நாட்கள் நடைபெறும் ? என்பதெல்லாம் அன்றைய தினம் நடைபெறக்கூடிய அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்து இருக்கின்றார். ஆண்டின் தொடக்கத்திலேயே கூடும் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம்.

அரசு சார்பில் கொடுக்கக்கூடிய உரையை வாசித்து அதன் பிறகு ஆளுநர் சட்டசபையை தொடங்கி வைப்பார். அதை தொடர்ந்து ஆளும் கட்சி, எதிர்க்கட்சி வாதங்களை நடத்தும். பல்வேறு விஷயங்கள் எல்லாம் சட்டமன்றத்தில் பேசப்படும். எனவே முறைப்படி இந்த நிகழ்வுகளை தொடங்கி வைப்பதற்காக ஆளுநருக்கு அழைப்பு விடுப்பதற்காக சபாநாயகர் அப்பாவு ராஜ்பவன் வந்திருக்கின்றார். தற்பொழுது ஆளுநருக்கு அழைப்பு விடுக்க கூடிய பணியில் ஈடுபடுவார். இந்த சந்திப்பு என்பது சுமார் பத்து நிமிடம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Categories

Tech |