வேலூரில் முன் அனுமதி பெறாமல் மு.க.ஸ்டாலின் ஆலோசனை கூட்டம் நடத்திய தனியார் மண்டபத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
கடந்த ஏப்ரல் 18ம் தேதியன்று மக்களவை தேர்தல் தமிழகத்தில் வேலூர் தொகுதியை தவிர்த்து அனைத்து தொகுதிகளிலும் நடைபெற்றது. இதையடுத்து ஆகஸ்ட் 5 ஆம் தேதி அன்று தேர்தலை நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்ததையடுத்து, வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு பிரச்சார பயணங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் தேர்தலை முன்னிட்டு தேர்தலுக்கான விதிமுறைகள் வேலூர் தொகுதியில் அமுலுக்கு வந்தது. இந்நிலையில் முன்கூட்டியே எந்தவித அனுமதியும் பெறாமல் இஸ்லாமிய தலைவர்களுடன் தனியார் மண்டபம் ஒன்றில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூட்டம் நடத்தியதாக புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில் வட்டாட்சியர் கஜா தலைமையிலான விசாரணைக் குழு விசாரணை மேற்கொண்டது. இதையடுத்து தேர்தல் விதிமுறைகளை மீறி கூட்டம் நடத்தப்பட்டது உறுதி செய்யப்பட்ட பின் ஸ்டாலின் கூட்டம் நடத்திய தனியார் மண்டபத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.