RuPay டெபிட் கார்டு, BHIM UPI மூலம் சிறிய அளவில் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்வதற்கு ஊக்கப்பரிசு அளிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. சிறிய அளவில் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்வோருக்கு ஊக்கப்பரிசு வழங்க ரூ.1,300 கோடி மத்திய அரசு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ரூபே டெபிட் கார்டு மற்றும் BHIM UPI என்ற சிறிய அளவிலான டிஜிட்டல் பரிவர்த்தனைகள் கொண்ட செயல்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இது தொடர்பாக மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் செய்தியாளர்களிடம் பேசும் பொழுது இந்த திட்டத்திற்காக மட்டும் 1300 கோடி ரூபாய் செலவாகும் என்று கூறினார். இதனை தொடர்ந்து சிறிய அளவில் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்பவருக்கு ஊக்கப்பரிசு வழங்குவதற்காக 1300 கோடி ஒதுக்கீடு செய்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த செய்தி ரூபே டெபிட் கார்டு மற்றும் BHIM UPI போன்ற செயலிகளை பயன்படுத்துவோர் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.