Categories
மாநில செய்திகள்

#BREAKING : இடிதாக்கி உயிரிழப்பு: ”ரூ.4 லட்சம் நிவாரணம்” முதல்வர் அறிவிப்பு …!!

தமிழகத்தில் நேற்று இடிதாக்கி உயிரிழந்த 6 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் நேற்று முதல் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இடி , மின்னல் தாக்கி உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்க தமிழக முதலமைச்சர் தற்போது உத்தரவிட்டுள்ளார்.

இடி , மின்னல் காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் வழங்கப்படும் என்று அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்  இதில் புதுக்கோட்டை , பெரம்பலூர் , காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 6 பேர்  நேற்று பெய்த மழையின் காரணமாக இடி , மின்னல் தாக்கி உயிரிழந்தனர் . உயிரிழந்த 6 பேரின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்த தமிழக முதல்வர்  இந்த நிவாரண அறிவிப்பை அறிவித்துள்ளார்.

Categories

Tech |