பராமரிப்பு பணிகளுக்காக மின் நிறுத்தம் செய்யும் நேரத்தை தமிழக மின்வாரியம் குறைத்துள்ளது.
தமிழகத்தில் பராமரிப்பு பணிகளுக்காக தமிழக மின்வாரியம் இணைப்பை துண்டிக்கும். அப்படிப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் மற்றும் நிறுவனங்கள் பெரும் பாதிப்பை சந்திக்கின்றனர். தமிழகத்தில் பராமரிப்பு பணிகளுக்காக மின் நிறுத்தம் செய்யும் நேரத்தை தமிழக மின்வாரியம் குறைத்துள்ளது. இதுவரை 9 மணி அல்லது பத்து மணியிலிருந்து மாலை 5 மணி வரை பராமரிப்பு பணிக்காக மின் வினியோகம் நிறுத்தப்பட்டது.
இதன் காரணமாக கொரோனா ஊரடங்கால் வீட்டிலிருந்து பணி புரியும் நபர்களுக்கு மிகவும் சிரமமாக உள்ளது. அதுமட்டுமில்லாமல் பள்ளிகள் திறக்கப்படாத காரணத்தினால் மாணவ மாணவியர்கள் ஆன்லைன் மூலமாகவே பாடம் பயின்று வருகின்றனர். இதனால் அவர்களது வகுப்புகளும் பாதிக்கப்படுகின்றது. இவற்றை கருத்தில்கொண்டு இனி பகல் 12 மணிக்குள் ஏதாவது இரண்டு மணி நேரம் வரை மின் வினியோகம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.