பொங்கல் திருநாளை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் மூன்று நாட்கள் மதுக்கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் பொங்கல் திரு நாளான ஜனவரி 15, அதனைத் தொடர்ந்து 26 மற்றும் 28 தேதிகளில் மதுக்கடைகளை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜனவரி 15 பொங்கல் திருநாள், அதைத்தொடர்ந்து ஜனவரி 26 குடியரசு நாள், ஜனவரி 28 தைப்பூசம் ஆகிய மூன்று நாட்களும் மதுபான கடைகளை மூட உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதனை மீறி மது விற்பனையில் ஈடுபட்டால் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அம்மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 143 மதுபான கடைகள் உள்ளன. இதில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள 10 இடங்களில் உள்ள கடைகள் திறக்கப்படவில்லை. மற்ற அனைத்து கடைகளும் திறக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.