பொங்கலுக்கு 1000 வழங்குவதற்கு தடைகேட்டு உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசாக தமிழக அரசு அனைவருக்கும் கரும்பு தூண்டு , அரிசி , பருப்பு , பணம் ரூ 1000 வழக்கும் என்று தெரிவித்திருந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் , திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த அலமேலு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதால் பொங்கலுக்கு அரசு வழங்கும் 1000 ரூபாய் பரிசு பெட்டகத்தை தேர்தல் முடியும் வரை வழங்கக்கூடாது என்றும் ,
இது வாக்குக்கு பணம் கொடுப்பதாக அமையும் , சட்டவிரோதமானது , தேர்தல் விதிகள் இருப்பதால் நீதிமன்றம் கவனம் கொள்ள வேண்டுமென்று உள்ளடக்கிய மனு தாக்கல் செய்துள்ளார். அடுத்தவாரம் கிறிஸ்துமஸ் நடைபெறுவதால் நீதிமன்றம் விடுமுறைக்கு பின் 30-ஆம் தேதி தான் நடைபெறும் என்பதை கவனத்தில் கொண்டு இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுகோள் விடுத்தார். இதை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டதால் மதியம் 2.15 மணிக்கு நீதிபதி சத்தியநாராயணன் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வருகின்றது.