Categories
தேசிய செய்திகள்

BREAKING: அரசியலில் திடீர் பரபரப்பு… ஆட்சி மாறுமா…?

புதுச்சேரியில் சபாநாயகர் பதவியை பாஜகவுக்கு தரக்கூடாது என முதல்வர் ரங்கசாமிக்கு என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

புதுச்சேரி மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 16 இடங்களை என்ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி வெற்றி பெற்றது. இதையடுத்து என்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி கடந்த ஏப்ரல் 7 ஆம் தேதி முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார். தேர்தலின் முடிவில் 10 இடங்களை என் ஆர் காங்கிரஸும், 6 இடங்களை பாஜகவும் கைப்பற்றியது. இதையடுத்து அமைச்சரவை கூட்டத்தில் இடம்பெறுவது குறித்து எம்எல்ஏக்கள் இடையே பிரச்சனை எழுந்துள்ளது.

புதுச்சேரி அமைச்சரவையில் பாஜக அமைச்சர்கள் மூன்று  பதவிகளை கேட்டு வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இதுகுறித்து புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி முடிவு எடுக்காத நிலையில் அரசியலில் பல குளறுபடிகள் ஏற்பட்டு வருகின்றது. இதுபோன்ற சூழ்நிலையில் சபாநாயகர் பதவியை பாஜகவுக்கு தரக்கூடாது என முதல்வர் ரங்கசாமிக்கு என்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வலியுறுத்தியுள்ளனர். சபாநாயகர், அமைச்சர்கள் பதவி கேட்டு பாஜக தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருவதாக கூறப்படும் நிலையில், பாஜக மேலிட பொறுப்பாளர்களை ரங்கசாமி சந்திக்க மறுத்ததால் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாஜகவுக்கு இரண்டு அமைச்சர்கள் பதவிக்கு மேல் தர முடியாது என்ற முடிவில் ரங்கசாமி உள்ளார்.

Categories

Tech |