Categories
தேசிய செய்திகள்

BREAKING: அரசியலில் திடீர் திருப்பம்… மாறும் ஆட்சி..? புதிய பரபரப்பு…!!

புதுச்சேரியில் ரங்கசாமி தலைமையிலான புதிய அரசு பதவியேற்ற நிலையில் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 2ஆம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில் இதில் என் ஆர் காங்கிரஸ் 10 இடங்களிலும், பாஜக 6 இடங்களிலும் வெற்றி பெற்று இந்தக் கூட்டணி ஆட்சி அமைத்தது. இதனால் என் ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி முதல்வராக கடந்த 7ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார். இதையடுத்து அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று கடந்த 17ஆம் தேதி வீடு திரும்பினார். இதன் காரணமாகவே எம்எல்ஏக்கள் பதவி ஏற்பு தள்ளிப்போனது.

பின்னர் இன்று தற்காலிக சபாநாயகராக லட்சுமிநாராயணன் பதவி ஏற்றுக் கொண்டார். அதன்பிறகு எம்எல்ஏக்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். தேர்தலில் 6 பாஜக எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றதை அடுத்து, 3 நியமன எம்எல்ஏக்கள், 3 சுயேச்சை எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் பேரவையில் பாஜக  பலம் 12 ஆக உயர்ந்துள்ளதால் அரசியலில் திருப்பம் ஏற்படுமா என்ற பரபரப்பு எழுந்துள்ளது. பாஜக தலைமையில் ஆட்சி உருவாக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

Categories

Tech |