பொள்ளாச்சியில் பாஜக, ஆர் எஸ் எஸ் நிர்வாகிகளின் வாகனங்கள் உடைக்கப்பட்ட வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள குமரன் நகரில் பாஜகவை சேர்ந்த பொன்ராஜ் மற்றும் சிவா என்ற இரண்டு நபர்களினுடைய கார்கள், ஆட்டோக்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. அதேபோல இந்து முன்னணியைச் சேர்ந்த சரவணகுமார் என்பவரது ஆட்டோவும், அவரது தந்தையின் ஆட்டோ கண்ணாடி உடைக்கப்பட்டது. இதையடுத்து கோவை மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் பொள்ளாச்சி துணை கண்காணிப்பாளர் தலைமையில் எட்டு தனிப்படை போலீசார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த முகமது ரஃபீக், மாலிக் என்ற சாதிக் பாஷா, ராஜா ரமீஸ் ஆகிய 3 நபர்களை போலீஸ் கைது செய்து இருக்கிறார்கள். மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறை கூறும் போது, மேற்கொண்டு பல நபர்களின் தொடர்பு இதில் உள்ளதாக தெரிய வருகிறது. நாங்கள் தீவிரமாக தேடிக்கொண்டு வருகின்றோம். அதேபோல் சோதனை சாவடிகள் அமைத்து பொள்ளாச்சிக்கு வெளியூரில் இருந்து வரும் வாகனங்களை தீவிரமாக கண்காணித்து வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.