Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: நாடு முழுவதும் மார்ச் 31 வரை அனைத்து பயணிகள் ரயில் சேவை ரத்து …!!

நாடு முழுவதும் உள்ள ரயில் சேவை மார்ச் 31ஆம் தேதி வரை இரத்து செய்வதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. உலகம் முழுவதும் 13ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிா்களை பலி வாங்கியுள்ளது. இதனால் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சா்வதேச நாடுகள் தீவிரப்படுத்தியுள்ளன.

கடந்த சில நாட்களாக இந்தியாவிலும்  கொரோனா வைரஸ் பாதிப்பு வேகமாக பரவி வருகின்றது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 314ஆக உயர்ந்த நிலையில் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றது.இந்தியாவில் மட்டும் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. கர்நாடகா , டெல்லி,  மராட்டியம் , பஞ்சாப் , பீகார் என 6 பேர் உயிரிழந்த நிலையில்  மார்ச் 31ஆம் தேதி வரை பயணிகள் ரயில் சேவையை ரத்து செய்து இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. இந்த உத்தரவு சரக்கு ரயில் சேவைக்கு பொருந்தாது என்றும் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |