அதிமுகவின் அதிகாரபூர்வ ‘நமது அம்மா’ நாளிதழின் நிறுவனர் பொறுப்பில் இருந்து ஓபிஎஸ் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். நாளிதழின் நேற்றைய பதிப்பில் ஓபிஎஸ், இபிஎஸ் பெயர் இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய பதிப்பில் ஓபிஎஸ் பெயர் நீக்கபட்டுள்ளது. அதிமுகவின் உட்கட்சி மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், இபிஎஸ்-ன் அடுத்தகட்ட நகர்வாக இது பார்க்கப்படுகின்றது.
இன்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா அவர்களின் உயிரான தொண்டர்களுடன் என்றும் நான் இருப்பேன். அதிமுகவில் என்னை யாராலும் நீக்க முடியாது. பன்னீர்செல்வம் போன்ற தூய தொண்டனை பெற்றது என்னுடைய பாக்கியம் என்று அம்மா அவர்கள் எனக்கு சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள் என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.