Categories
மாநில செய்திகள்

#Breaking: ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஒப்புதல் ? தமிழக அரசு அதிரடி

ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பான சட்டத்திற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இன்று காலை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட வேண்டிய மசோதாக்கள் குறித்தும்,  அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் ஆன்லைன் விளையாட்டு தடை சட்டத்திற்கு ஒப்புதல் தரப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது

ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்கு படுத்துவது தொடர்பான சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் ஆன்லைன் விளையாட்டுகளில் ஒரு சில விளையாட்டுகளை மட்டும் தடை செய்வதாகவும், மற்ற விளையாட்டுகளை  ஒழுங்குபடுத்துவதாகவும் சட்ட மசோதாவில் இருப்பதாக தெரிகிறது. அதுமட்டுமில்லாமல் தமிழக சட்டமன்றம் கூடுவது எப்போது என்பது உள்ளிட்ட தேதியையும் சபாநாயகருக்கு பரிந்துரை செய்ய இருக்கிறார்கள். சபாநாயகர் விரைவில் அந்த சட்டமன்றம் கூடும் என்ற அறிவிப்பை வெளியிடுவார்.

ஏற்கனவே ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஆன்லைனில் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக ஒரு கமிட்டி அதன் அறிக்கை முதல்வரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் தற்கொலை தடுப்பு உள்ளிட்ட பல விஷயங்களில் தமிழக அரசின் மருத்துவர்கள், காவல்துறை ஆவண காப்பக அதிகாரி, ஐஐடி பேராசிரியர்கள் உள்ளிட்ட பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று கூடிய அமைச்சரவை கூட்டம் அரை மணி நேரம் தான் நடந்தது. 9.30 மணிக்கு தொடங்கிய அமைச்சரவை கூட்டம் 10 மணிக்கு முடிந்து விட்டது. இதில் அமைச்சர்கள் அனைவரும் ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்கு படுத்துவது தொடர்பான சட்ட மசோதாவிற்கு ஒப்புதலை வழங்கி இருக்கிறார்கள். விரைவில் இதற்கான அவசர சட்டம் பிறப்பிக்கப்படும் அல்லது விரைவில் கூட உள்ள சட்டமன்றத்தில் சட்ட மசோதா கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்படும் என தெரிகிறது.

Categories

Tech |