Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மருத்துவர்களுக்கு, மருத்துவ பணியாளர்களுக்கு துணை நிற்போம் – முதல்வர்

மருத்துவர்களுக்கு, மருத்துவ பணியாளர்களுக்கு துணை நிற்போம் என்று தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அமைக்கப்பட்டுள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கொண்ட குழுவுடன் தமிழக முதல்வர் தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் , தமிழகத்தில் கொரோனா ஒருங்கிணைப்புக்குழு சிறப்பாக பணியாற்றி வருகிறது. கொரோனா நோயின் தாக்கத்தை பொறுத்து ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.

மயிலாப்பூரில் பணியின்போது உயிரிழந்த காவலர் அருண்காந்தி குடும்பத்திற்கு ₹10 லட்சம் நிதியுதவியும், ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும்.  தமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை 8 பேர் உயிரிழப்பு. கொரோனா பரவல் 3ஆம் கட்டத்திற்கு நகர வாய்ப்பு உள்ளது; இருப்பினும் தடுப்பு நடவடிக்கை தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றது.

தமிழகத்தில் 96.30 சதவீதம் பேருக்கு கொரோனா நிவாரண தொகை ரூ.1000 வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சுமார் 3 லட்சம் வெளி மாநில தொழிலாளர்கள் உள்ளனர். 4 லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் வாங்கப்பட உள்ளது – அதில் 50 ஆயிரம் கருவிகள் இன்று வந்துவிடும். 3,370 செயற்கை சுவாச கருவிகள் கையிருப்பில் உள்ளன. கொரோனா சிகிச்சைக்கு 137 தனியார் மருத்துவ கல்லூரி, மருத்துவமனைகள் தேர்வு. மருத்துவர்களுக்கு, மருத்துவ பணியாளர்களுக்கு துணை நிற்போம் என்று முதல்வர் தெரிவித்தார்.

Categories

Tech |