என்.ஆர்.சிக்கும், என்.பி.ஆர்க்கும் எந்தத் தொடர்பும் இல்லை என அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார்.
தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கும், குடிமக்கள் பதிவேட்டிற்கும் பொதுமக்களிடையே பெரிய குழப்பங்கள் ஏற்பட்டநிலையில் இதன் மூலமாக குடியுரிமை பறிக்கப்படும் என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது. எனவே இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ANI செய்தி நிறுவனத்துக்கு விரிவான விளக்கம் அளித்தார். அப்போது அமித்ஷா கூறுகையில் NRC , NPR_க்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை அவர் தெளிவாக விளக்குகின்றார். இதனை தனித்தனியாக பாருங்கள் என்று அவர் தெளிவுபடுத்துகின்றார்.
என்.ஆர்.சி என்று சொல்லக்கூடிய தேசிய குடியுரிமை பதிவேடு என்பது இந்த நாட்டின் குடிமக்கள் இவர் தானா ? என்பதை நாடு முழுவதும் அமல்படுத்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து தற்போது அசாம் மாநிலத்தில் மட்டும் அதை செயல்படுத்தப்பட்டு வருகிறதே தவிர நாடு முழுவதும் இந்த விஷயத்தைக் கொண்டு செல்லக்கூடிய எந்தவிதமான திட்டமும் தற்போதைக்கு இல்லை என்றும் இது தொடர்பாக பாராளுமன்றத்திலோ , மத்திய அமைச்சரவையிலோ எந்த விவாதமும் மேற்கொள்ளப்படவில்லை.
மேலும் இந்த திட்டத்தில் கண்டறியப்படும் மாற்று மக்களை முகாம்களில் தங்க வைப்பதற்கான அகதிகள் முகாம் கட்டப் படுவதற்கான எந்த விதமான முன்னேற்பாடுகளையும் மத்திய அரசு தொடங்க வில்லை என்பதையும் அவர் தெளிவாக கூறியிருக்கிறார். இந்த இரண்டு சட்டமும் பல்வேறு கண்டன குரல்களுக்கு உள்ளாகிய நிலையில் தற்போது விரிவான விளக்கங்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்து வருகின்றார்.என்.ஆர்.சி என்று சொல்லக்கூடிய தேசிய மக்கள் தொகை பதிவேடு என்பது வெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்புடையது தானே தவிர அதை வேறு இதனுடன் தொடர்பு படுத்த வேண்டாம். எதிர்க்கட்சிகள் இதனை பெரிதாக்கி மக்களை பயம்கொள்ள வைக்கின்றன என்று அமித்ஷா தெரிவித்தார்.