அதிமுக தலைவரின் படம் மற்றும் சின்னம் பொறிக்கப்பட்ட டோக்கன்களுக்கு பொங்கல் பரிசு கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் நிவர் புயல் மற்றும் கொரோனாவால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் பொங்கல் பண்டிகையொட்டி பொங்கல் பரிசுத் தொகையாக ரூபாய் 2500 வழங்கப்படும் என்று அறிவித்தார். இதையடுத்து நியாய விலை கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று டோக்கன் விநியோகம் செய்து வந்தனர். மேலும் டோக்கன் வினியோகம் இன்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து டோக்கன்களில் அதிமுக தலைவர்களின் படம் இடம் பெற்று இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.
எனவே அதிமுக தலைவர்களின் படம் மற்றும் சின்னம் இடம்பெற்றுள்ள டோக்கன்களுக்கு பொங்கல் பரிசு கிடையாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. கூட்டுறவு மற்றும் உணவு வழங்கல் துறை வழங்கிய அதிகாரப்பூர்வ டோக்கன்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு வழங்கப்படும் என கூறியுள்ளது. பொங்கல் பரிசு டோக்கன்களில் அதிமுக தலைவர்களின் படம், சின்னம் இடம்பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் அரசு பதில் அளித்துள்ளது.