சீனா செல்வதற்காக இணையத்தில் விசா விண்ணப்பிக்கும் முறை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுள்ளது.
சீனாவில் பெரிய அளவிலான பாதிப்பை சந்தித்து வருகின்றது. கொரோனா வைரஸ் சீனாவின் மொத்த பகுதிக்கும் பரவி இருப்பதாகவும் தகவல்கள் சொல்லப்படுகின்றது. அதனால் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கொரோனா வைரஸ் பாதிப்பு பரவி வருகின்றது.சீனாவில் தங்கி இருந்து இந்தியா வந்த இரண்டு பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகியிருக்கிறது.
தற்போது ஏராளமானோர் இந்தியாவிற்கு வருவதற்கான வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகின்றது. குறிப்பாக இந்தியாவில் மருத்துவ வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் தாராளமாக இருக்கக் கூடிய சூழ்நிலையில் சாதாரணமாகவே இந்தியாவிற்கு மருத்துவ வசதிகளுக்காக வரக்கூடிய வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை மிக அதிகம்.
சீனாவில் இருந்து சீனா குடிமக்கள் மற்றும் சீனாவில் தங்கி இருக்க கூடிய வெளிநாட்டவர்கள் இந்தியாவிற்கு வரக்கூடிய இ-விசா முறையை நேற்று தற்காலிகமாக மத்திய அரசு நிறுத்தி வைப்பதாக அறிவித்தது. கொரோனா நோய் தொற்று பரவாமல் இருக்க அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.
இந்நிலையில் சீனா செல்வதற்காக இணையத்தில் விசா விண்ணப்பிக்கும் முறையையும் தற்போது தற்காலிக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே இ- விசா சேவையை நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில் அடுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.