Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING NEWS: ஓபிஎஸ் அதிமுக உறுப்பினரே கிடையாது – உச்சநீதிமன்றத்தில் தெறிக்கவிட்ட எடப்பாடி ..!!

அதிமுக தலைமை அலுவலக சாவியை எடப்பாடி பழனிச்சாமி இடம் வழங்கப்பட்டதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார். இந்த மனுவிற்கு பதிலளிக்க  கோட்டாட்சியர் மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது.

இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வர இருக்கும் நிலையில்,  எடப்பாடி பழனிச்சாமி பதில் மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அதில் ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவின் அடிப்படை உறுப்பினரே கிடையாது. அதிமுகவுக்கும் அவருக்கும் சம்பந்தமே இல்லை. அவரால் அதிமுகவில் தலைமை அலுவலகம் சூறையாடப்பட்டது, நிறைய பொருட்கள் காணாமல் போய் உள்ளன.

அப்படிப்பட்ட ஒருவரிடம் அதிமுக சாவியை கொடுப்பது முறையாக இருக்காது ? அதிமுகவிற்கு தொடர்பில்லாத ஒருவரிடம் அலுவக சாவியை கொடுக்க கூடாது. ஓபிஎஸ்ஸின் முறையீட்டு மனு விசாரிக்க தகுதியற்றது.  எனவே அதை தள்ளுபடி செய்ய வேண்டும் என எழுத்துப்பூர்வமாக தனது பதில் மனுவில் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |