சென்னையில் பொதுப் போக்குவரத்துக்கான புதிய தகவலை சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது.
சென்னையில் நாளை முதல் மாநகரப் பேருந்துகள் 50 சதவீத இருக்கையுடன் மட்டுமே இயங்கும் என்று மாநகர போக்குவரத்து கழக அதிகாரி தெரிவித்துள்ளார். பேருந்து ஓட்டுநர், நடத்துநர் ஆகியோர் பணிக்கு வரும் முன் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படவேண்டும். பயணிகள் மாஸ்க் அணிய வேண்டும். பேருந்து நிறுத்தங்களில் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் நாளை முதல் நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கான அறிவிப்பை நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார். பல்வேறு அம்சங்களில் தமிழகத்தில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொது போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பொது போக்குவரத்து தொடர்பானபுதிய அறிவிப்பை சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது.