தமிழக அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டில் ஆதாரம் இருந்தால் ஸ்டாலின் நீதிமன்றத்தை நாடி இருப்பார் என தமிழ் துறை வளர்ச்சி தலைவர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஊழல் குற்றச்சாட்டில் ஆதாரம் இல்லாத காரணத்தால் பிரேக்கிங் நியூஸ் வரவேண்டும் என்பதற்காக, அரசியல் ஆதாயம் தேடுவதற்காகவும் திமுக தலைவர் ஸ்டாலின் ஆளுநரை சந்தித்து புகார் கொடுப்பதாக அவர் விமர்சித்தார். மேலும், சிஎம் துறையில் ஸ்டாலின் வச்ச குற்றச்சாட்டுக்கு அடுத்த நாளே முதல்வர் அதை உடைத்தார்.
டெண்டரே விடாத வேலையில் ஊழல் அப்படின்னு சொல்றது, அது குற்றச்சாட்டின் சாரமற்ற தன்மை தான் சொல்கிறது. அதைப்போல பல குற்றச்சாட்டுகள் எந்த ஆதாரமும் இல்லாமல் ஸ்டாலின் முன்வைக்கின்றார். இதனால் கவர்னரை பாக்குறாங்க. கவர்னர் இது போன்ற விளம்பர பிரியர்களுக்கு ஊக்கம் தரக்கூடாது எனஅமைச்சர் தெரிவித்தார.