அதிமுக பொருளாளராக யாரை நியமிக்கலாம் என ஈபிஎஸ் தரப்பு ஆலோசனை நடத்தி வருகின்றது.
அதிமுக தலைமை அலுவலகத்தில் ஈபிஎஸ் அழைப்பின் பேரில் இன்று தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்று வருகின்றது. இந்த மேடையில் இபிஎஸ், தமிழ்மகன் உசேன், கேபி முனுசாமி ஆகியோர் அமர்ந்துள்ளனர். ஆலோசனை என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கு மேலாக இந்த ஆலோசனை என்பது நீடித்திருக்கிறது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்னும் சிறிது நேரத்தில் செய்தியாளரை சந்திக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அதிமுகவில் பொருளாளர் பதவி என்பது மிக முக்கியமான ஓன்று.
ஒருங்கிணைப்பாளர் பதவி என்பது காலாவதி ஆகிவிட்டது என்று சொல்லி நேற்று முன்தினம் சொல்லியிருந்தார்கள். இந்த நிலையில் அடுத்ததாக பார்த்தோமென்றால் ஓ.பன்னீர்செல்வத்திடம் பொருளாளர் பதவி என்பது இருக்கின்றது. இந்நிலையில் அதிலிருந்தும் அவரை நீக்குவதற்கான ஒரு முடிவு என்பது தலைமை கழக நிர்வாகிகள் எடுக்கப்படும் என்ற ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்நிலையில் பொருளாளராக அவரை நீக்கினால் அந்தப் பதவியில் யாரை நியமிப்பார்கள் என்ற கேள்வியும் முன்னால் இருக்கிறது.
முன்னாள் அமைச்சரான கேபி முனுசாமி, திண்டுக்கல், ஜெயக்குமாரின் பெயர்கள் கூட இதில் இருப்பதாக தெரிகிறது. ஓ பன்னீர்செல்வத்தை அந்த பொறுப்பில் இருந்து நீக்கி விட்டு, அவருடைய சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை நியமிக்கலாம் என்பதையும் விரிவாக விவாதித்து கொண்டு வருவதாகச் சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் ஜூலை 11ம் தேதி பொதுக்குழு நடைபெற உள்ள நிலையில் ஒற்றை தலைமை தொடர்பான தீர்மானம் பொதுச்செயலாளராக ஒருவரை நியமிக்கப்படுவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளதாகவும் சொல்லபடுகின்றது.