Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

Breaking: பிரதமர் தலைமையில் கூட்டம்…! C.Mஸ்டாலின் பங்கேற்கவில்லை…!!

நிதி ஆயோக் ஏழாவது நிர்வாக கவுன்சிலிங் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டம் என்பது இன்று மாலை 4 மணி வரை நடைபெறும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்திருக்கிறது. இந்த கூட்டத்தைப் பொருத்தமட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா,  நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்,  பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உள்ளிட்ட முக்கிய மத்திய அமைச்சர்கள் நேரடியாக கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

இது தவிர்த்து அனைத்து மாநில முதல்வர்களும் கலந்து கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா, உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்,  கேரள மாநில முதல்வர் பினராய் விஜயன், அதேபோன்று ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்வர்கள் கலந்து கொண்டிருக்கின்றார்கள்.

இந்த கூட்டத்தை பொருத்தமட்டில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இதை போன்று கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை, பீகார் மாநில முதல்வர்,  அதேபோன்று தெலுங்கானா மாநில முதல்வர் உள்ளிட்ட ஒரு சில மாநில முதல்வர்கள் இந்த கூட்டத்தில் பணி சுமை காரணமாக நேரடியாக கலந்து கொள்ள முடியவில்லை. ஆனால் தெலுங்கானா மாநில முதல்வர் இந்த கூட்டத்தை புறக்கணிப்பதாக ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

இந்த கூட்டத்தின் மிக முக்கிய நோக்கம் என்பது தேசிய கல்விக் கொள்கையை இந்தியா முழுவதும் அமல்படுத்துவது. அதே நேரத்தில் பயிர்கள்,  என்னை வித்துக்கள்,  விவசாயம் சார்ந்த விஷயங்களில் இந்தியா தன்னிறைவை எட்ட வேண்டும் உள்ளிட்ட விவகாரம் சம்பந்தமாகவும்,  நகர் நகர்ப்புற நிர்வாகம் சம்பந்தமாகவும்  இன்றைய கூட்டத்தில் விரிவாக ஆலோசனை என்பதை செய்யப்படுகிறது.

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்த கூட்டம் என்பது நேரடியாக தற்போது தலைநகர் டெல்லியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு g20 அமைப்பின் தலைமையை ஏற்க இருக்க இருக்கின்றது. அதே போல இந்தியாவும் g20  அமைப்பின் மாநாட்டை  நடத்த இருக்கும் நிலையில் இன்றைய கூட்டம் என்பது முக்கியத்துவம் வாய்ந்த கூட்டமாக பார்க்கப்படுவதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்திருக்கிறது. இந்த கூட்டம் நிறைவு அடைந்த பிறகு 5 மணியளவில் கூட்டத்தின் விவாதிக்கப்பட்ட முக்கிய அம்சங்கள் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற இருக்கிறது.

Categories

Tech |