Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING:தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை – முதல்வர் ஆலோசனை …!!

சென்னை தலைமைச் செயலகத்தில் கோவை சம்பவத்தை தொடர்ந்து மாநிலத்தில் சட்ட ஒழுங்கு நிலை குறித்து ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு,  உள்துறை செயலாளர் பனீந்திர ரெட்டி,  பொதுத்துறை செயலாளர் ஜெகநாதன்,  டி.ஜி.பி சைலேந்திரபாபு மற்றும் உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவ ஆசீர்வாதம், முதலமைச்சருடைய முதன்மை செயலாளர் உதயசந்திரன் ஐஏஎஸ் உள்ளிட்டோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்கள். கிட்டத்தட்ட 20 நிமிடங்களுக்கு மேலாக இந்த ஆலோசனை நடைபெற்றது.

அதற்கு முன்னதாக இந்த அதிகாரிகள் தனியாக தலைமைச் செயலாளர் அறையில் ஆலோசனை மேற்கொண்டார்கள். இதற்கு பிறகு முதலமைச்சரிடம் இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகத்தில் எந்த அளவுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது ? என்பது குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்தார்கள். இந்த சம்பவத்தில் தொடர்ச்சியாக எந்த அளவுக்கு கண்காணிக்கப்பட்டது?

ஞாயிற்றுக்கிழமை அதிகாலையிலேயே டிஜிபி அங்கே விரைந்து ஆய்வு மேற்கொண்டார். அது குறித்து எல்லாம் இன்றைக்கு விளக்கமாக சொல்லப்பட்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் தமிழகத்தில் உளவுத்துறை மேலும் விரைந்து தகவல் கொடுப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசிய அளவில் தீவிரவாதிகள் நடப்பட்டம் எந்த அளவுக்கு இருக்கிறது?  கியூ பிரான்ச் பிரிவு எந்த அளவுக்கு செயல்படுகிறது ?

அதே போல சிபிசிஐடியின் டிஜிபி இன்று கோவை சென்று  இருக்கிறார். இது குறித்து  இந்த ஆலோசனை கூட்டத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. தேசிய புலனாய்வு அமைப்பு இந்த வழக்கை விசாரிக்க வந்தாலும், தமிழக காவல்துறை அதிகாரிகளும் உடனிருந்து தேவையான உதவிகளை செய்வார்கள். தமிழகத்தின் பாதுகாப்பு தொடர்பான விஷயம் என்பதால் குறிப்பாக வணிக நகரமாக இருக்கக்கூடிய கோவையில் 1998க்கு பிறகு இது போன்ற ஒரு சம்பவம் நடைபெற்றிருக்கிறது.

இதையெல்லாம் வருங்காலங்களில் நடைபெறாமல் இருப்பதற்கு என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கிறது ? என்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக தமிழக அரசு அதிகாரப்பூர்வமாகவே ஒரு செய்தி குறிப்பை தற்போது வெளியிட்டு இருக்கிறார்கள்.

Categories

Tech |