Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#Breaking: 2 நாட்களில் கனியாமூர் பள்ளி – மாவட்ட ஆட்சியர் உத்தரவு ..!!

கள்ளக்குறிச்சி அருகே உள்ள கணியாமூர் சக்தி பள்ளியை திறக்க வேண்டும் என அங்கு பயின்ற 3500 க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அவர்கள் பெற்றோர்கள் தரப்பிலும்  கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாணவ – மாணவிகளின் பெற்றோர்கள் இன்று திடீரென்று கூடி உடனடியாக பள்ளியை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் மாணவ – மாணவிகளின் பெற்றோர்களை  சந்தித்தார். அவர்களிடம் மாவட்ட ஆட்சியர், இந்த பள்ளி விரைவில் திறக்கப்படும். அந்த பள்ளியை சரி செய்து, மறுசீரமைப்பு செய்வதற்கான பணிகள் இன்னும் இரண்டு நாட்களில் தொடங்கப்படும். பள்ளி மறு சீரமைப்புக்கு பின் பள்ளி தொடங்கப்படும் என  உறுதி அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தற்போது பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து கலைந்து சென்றுள்ளனர்.

Categories

Tech |