தமிழகத்தில் கொரோனா நிவாரண நிதியாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 2000 இன்று காலை 8 மணி முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்பட உள்ளது.
தமிழகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றார். முதல்வராக பதவி ஏற்றதை தொடர்ந்து ஐந்து முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் முதலாவதாக தமிழகத்தில் கொரோனா நிவாரண நிதியாக ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூபாய் 4 ஆயிரம் வழங்கவுள்ளதாக தெரிவித்திருந்தார்.
அதில் முதலாவதாக 2000 ரூபாய் வழங்கப்படும் என்று கூறியிருந்தார். அதன்படி 8 மணி முதல் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 2000 வழங்கப்படுகின்றது. முதல் தவணை ரூபாய் 2000 வழங்குவதற்காக மே 10-12 வரை டோக்கன் வினியோகிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் 2.7 கோடி பேர் பயன் அடைவார்கள். மேலும் இரண்டாவது தவணையாக ரூ.2000 அடுத்த மாதம் வழங்கப்பட உள்ளது.