Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking: தமிழகத்தில்…. இந்த 16 மாவட்டங்களுக்கு…. ”நாளையும் விடுமுறை”…!! எடப்பாடி அறிவிப்பு …..!!

நிபர் புயல் காரணமாக நாளையும் தமிழகத்தில் உள்ள 16 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சற்று முன்பு  13 மாவட்டத்திற்கு பொது விடுமுறை விடப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்த நிலையில் நிபர் புயலின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாவட்டங்கள் எண்ணிக்கை மேலும் 3 உயர்த்தி  மொத்தம் 16 மாவட்டங்களுக்கு அரசு பொது விடுமுறை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

மாவட்டங்களைப் பொருத்தவரை பார்த்தோமென்றால் தஞ்சாவூர், திருவாரூர், திருவண்ணாமலை, கடலூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட 16 மாவட்டங்களுக்கு தற்போது பொது விடுமுறை என அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

Categories

Tech |