தமிழகத்தில் மீண்டும் ஆபாச படங்களை பகிர்வது அதிகரித்து வருவதாக உயர் நீதிமன்ற கிளை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. சமீபத்தில் பெண்களை ஆபாசமாக படம் பிடித்து அதை பகிர்ந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இதையடுத்து இந்த பிரச்சினை குறித்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு அவ்வாறு பகிர்ந்து வருபவர்களின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்படும் என்று எச்சரிக்கை விடப்பட்டது.
இதனால் கடந்த சில மாதங்களாக இதுபோன்ற புகார்கள் வராமல் இருந்தது. ஆனால் தற்போது மீண்டும் குழந்தைகளின் ஆபாச படங்களை பகிர்வது அதிகரித்து வருவதாக உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இது தீவிரமாக அணுக வேண்டிய பிரச்சினை எனவும், போக்சோ சட்ட விதி பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது மத்திய மாநில அரசுகளின் கடமை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் நல்லொழுக்க கல்வி மட்டுமே இதுபோன்ற குற்றங்களை தடுக்கும் அரணாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.