Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: சென்னை மாணவி கொலை நடந்தது எப்படி ? – அதிர்ச்சி தகவல்கள் …!

பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி ஒருவர் ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. சென்னை ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சத்தியா. இவர் தனியார் டி நகரில் உள்ள ஜெயின் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் என்று வழக்கம்போல பரங்கிமலை ரயில் நிலையத்திலிருந்து தனது கல்லூரிக்கு செல்வதற்காக காத்திருக்கிறார். அப்போது சதீஷ் அங்கு வந்துள்ளார். அப்பொழுது சத்யா தனது தோழிகளுடன் பொதுமக்கள் முன்னிலையில் நின்று கொண்டிருக்கிறார்.

சதீஷ் சத்தியாவிடம் பேச தொடங்கினார். இருவரும் ஒரு சிறிது நேரம் பேசி கொண்டு இருந்தனர். அப்போது இரண்டு பேருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. சத்யா தோழிகள் இருக்கும்போதே இருவர்கள் சண்டை போட்டுக்கொண்டுள்ளனர். அப்போது கோபமடைந்த சதிஷ், சத்யாவை கடுமையாக திட்டி உள்ளார். திடீரென அந்த நேரத்தில் தாம்பரத்திலிருந்து சென்னை பீச்சுக்கு செல்லும் ரயில் வந்துள்ளது.ரயிலில் ஏறி செல்வதாக கூறிய அங்கிருந்து சத்யா நடந்துள்ளார்.

இதை பார்த்து ஆத்திரமடைந்த சதீஷ் அங்கே நிற்குமாறு கூறிள்ளார்.  மீண்டும் சத்யா அங்கிருந்து செல்லும்போது கோபமடைந்த சதீஷ் ரயிலிலே அந்த பெண்ண தள்ளிவிட்டார். அப்போது  ரயில் மோதியதில் சத்யாவுக்கு தலை தனியாக துண்டாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதை பார்த்து அவருடைய தோழிகள் மட்டுமல்லாமல்,  பொதுமக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர.  உடனடியாக அங்கிருந்தவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

பின்னர் சதீஷ் அங்கிருந்து உடனடியாக தப்பி ஓடி உள்ளான். உடனடியாக போலீசா உடலை கைப்பற்றி, தற்பொழுது  ஏழு தனிப்படை அமைத்து சதீஷை தேடி வருகிறார்கள். சத்தியாவின் தாயார் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் போலீசாக பணிபுரிந்து வருகிறார். அதே நேரத்தில் சதீஷ் உடைய தந்தையும் ஏற்கனவே போலீசில் பணி செய்து ஓய்வு பெற்றதாக கூறப்படுகிறது.  ஏற்கனவே சதீஷ் மீது இரு காவல் நிலையத்தில் சத்யா சார்பில் புகார் அளிக்கப்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.

Categories

Tech |