Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking : குட் நியூஸ் – தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி ஆல் பாஸ்!

தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி ஆல் பாஸ் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஊரடங்கால் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கபட்ட நிலையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூன் மாதம் 15ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா அச்சுறுத்தல்களுக்கு இடையே தேர்வு நடைபெற இருப்பதால் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் தமிழகத்தில் இந்தாண்டு (2020) 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக முதல்வர் பழனிசாமி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

வரும் ஜூன் 15ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடைபெற இருந்த 10ம் வகுப்பு மற்றும் விடுபட்ட 11ம் வகுப்பு தேர்வுகளும் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தகவலை வெளியிட்டுள்ளார். இதன் மூலம் 10ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி ஆல் பாஸ் என அறிவித்துள்ளார். காலாண்டு, அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் 80% மதிப்பெண் அளிக்கப்படும், எஞ்சிய 20% மதிப்பெண்கள் மாணவர்களின் வருகை அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் என கூறியுள்ளார்.

குறுகிய காலத்தில் கொரோனா பாதிப்பு குறைய வாய்ப்பு உள்ளதால் மாணவர்கள் நலன் மற்றும் பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் தகவல் அளித்துள்ளார். 12ம் வகுப்பு மறு தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தகவல் அளித்துள்ளார். முன்னதாக 10ம் வகுப்பு தேர்வை ஜூலை மாதம் தள்ளி வைப்பது குறித்து உயர்நீதிமன்றம் நேற்று கூறியிருந்த நிலையில் இன்று தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முதல்வரின் இந்த அறிவிப்பை பல்வேறு தரப்பினரும், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களும் வரவேற்றுள்ளனர்.

Categories

Tech |