சென்னையில் தங்கத்தின் விலை அதிகரித்து விற்பனையாவதால் வாடிக்கையாளர்கள் கவலையடைந்துள்ளனர்.
சென்னையில் இன்று மாலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 824 உயர்ந்து ரூ 33, 024 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 103 உயர்ந்து ரூ 4, 128 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் விலையில் ரூ 1.50 உயர்ந்து ரூ 50 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.