Categories
பல்சுவை மாநில செய்திகள்

BREAKING : புதிய உச்சத்தில் தங்கம்… சவரன் ரூ 31,720-க்கு விற்பனை..!!

தங்கம் விலை பவுனுக்கு ரூ 312 உயர்ந்து விற்பனையாவதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.

கடந்த சில வாரம் ஏற்றம் , இறக்கம் என வாடிக்கையாளர்களுக்கு கண்ணாம்பூச்சி ஆட்டம் காட்டிய தங்கத்தின் விலை 31 ஆயிரத்தை தாண்டியது. இந்த நிலையில் இன்று மாலை நிலவரப்படி சென்னையில் ஆபரண தங்கம் கிராமுக்கு 39 ரூபாயும், சவரனுக்கு 312 ரூபாயும் உயர்ந்து விற்பனையாகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 312 உயர்ந்து ரூ 31,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல 22 காரட் 1 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ 39 உயர்ந்து ரூ 3,965-க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதேபோல வெள்ளி கிராமுக்கு ரூ 1.20 உயர்ந்து  ரூபாய் 51.80-க்கு  விற்பனை செய்யப்படுகின்றது. தங்கம் விலை இதுவரை இல்லாத உச்சத்தில் உள்ளதால் பொதுமக்கள் கவலை  அடைந்துள்ளனர்.

Categories

Tech |